# Reading comprehension practice questions (Group 4)

> This page has practice questions on Reading comprehension for the Group 4 / VAO (Combined Civil Services Examination-IV) exam, 20 in all: new questions our editors prepared and the founder approved, not previous-year questions. Tap “Answer and explanation” under each question for the correct answer and a short, sourced explanation. For previous-year papers and official answer keys, see tnpsc.gov.in.

Last updated: 2026-11-02 · By TNPSC Guide editorial team
URL: https://www.tnpscguide.com/exams/group-4/questions/tamil-reading

### Question 1

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
சோழ மன்னர்களின் சாசனங்கள் பெரும்பாலும் அரசனின் புகழைக் கூறும் பகுதியோடு தொடங்கும். இப்பகுதியே மெய்க்கீர்த்தி. ஆட்சியாண்டைச் சொல்லும் இடத்தில் இது வரும். அரசன் பெற்ற போர் வெற்றிகளும் அவன் வரலாறும் இதில் வரிசையாக இடம்பெறும். அதன் பின்னரே சாசனம் எழுந்த நிகழ்ச்சி சொல்லப்படும். முதல் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. தொடக்கத்தில் சுருக்கமாக இருந்த இது, பின்னர் அரச மரபை விரிவாகக் கூறியது.
இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு எது?

- A. சோழர் போர்கள்
- B. முதல் இராசராசனின் ஆட்சி
- C. மெய்க்கீர்த்தியும் அதன் வளர்ச்சியும்
- D. சோழ மன்னர்களின் கோவில்கள்

Correct answer: C. மெய்க்கீர்த்தியும் அதன் வளர்ச்சியும்

பத்தி முழுவதும் மெய்க்கீர்த்தி என்பது என்ன, அது எப்படி விரிந்தது என்றே கூறுகிறது.

Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 7 சிறுவினா, p. 179 (PDF p. 189))

### Question 2

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
சோழ மன்னர்களின் சாசனங்கள் பெரும்பாலும் அரசனின் புகழைக் கூறும் பகுதியோடு தொடங்கும். இப்பகுதியே மெய்க்கீர்த்தி. ஆட்சியாண்டைச் சொல்லும் இடத்தில் இது வரும். அரசன் பெற்ற போர் வெற்றிகளும் அவன் வரலாறும் இதில் வரிசையாக இடம்பெறும். அதன் பின்னரே சாசனம் எழுந்த நிகழ்ச்சி சொல்லப்படும். முதல் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. தொடக்கத்தில் சுருக்கமாக இருந்த இது, பின்னர் அரச மரபை விரிவாகக் கூறியது.
மெய்க்கீர்த்தி எப்போது காணப்படுகிறது?

- A. முதல் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில்
- B. முதல் இராசராசனின் முதல் ஆட்சியாண்டில்
- C. சாசனம் எழுந்த பின்
- D. சோழ அரசு தொடங்கிய ஆண்டில்

Correct answer: A. முதல் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில்

முதல் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில்தான் காணப்படுகிறது என்று பத்தி கூறுகிறது.

Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 7 சிறுவினா, p. 179 (PDF p. 189))

### Question 3

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
சோழ மன்னர்களின் சாசனங்கள் பெரும்பாலும் அரசனின் புகழைக் கூறும் பகுதியோடு தொடங்கும். இப்பகுதியே மெய்க்கீர்த்தி. ஆட்சியாண்டைச் சொல்லும் இடத்தில் இது வரும். அரசன் பெற்ற போர் வெற்றிகளும் அவன் வரலாறும் இதில் வரிசையாக இடம்பெறும். அதன் பின்னரே சாசனம் எழுந்த நிகழ்ச்சி சொல்லப்படும். முதல் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. தொடக்கத்தில் சுருக்கமாக இருந்த இது, பின்னர் அரச மரபை விரிவாகக் கூறியது.
மெய்க்கீர்த்திக்குப் பின்னர் சாசனத்தில் சொல்லப்படுவது எது?

- A. அரசனின் போர் வெற்றிகள்
- B. சாசனம் எழுந்த நிகழ்ச்சி
- C. அரசனின் வரலாறு
- D. அரசனின் ஆட்சியாண்டு

Correct answer: B. சாசனம் எழுந்த நிகழ்ச்சி

வெற்றிகளும் வரலாறும் கூறிய பின்னரே சாசனம் எழுந்த நிகழ்ச்சி சொல்லப்படும்.

Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 7 சிறுவினா, p. 179 (PDF p. 189))

### Question 4

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை அறிந்து நடந்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். வாகனத்தை எப்போதும் சாலையின் இடப்பக்கமாகவே ஓட்ட வேண்டும். எதிரில் வரும் வாகனம் வலப்பக்கமாகச் செல்ல இடம் விட வேண்டும். சாலைகள் சந்திக்கும் இடத்திலும் மக்கள் கடக்கும் இடத்திலும் திருப்பத்திலும் வேகத்தைக் குறைக்க வேண்டும். தீயணைப்பு வண்டியும் அவசரச்சிகிச்சை ஊர்தியும் தடையின்றிச் செல்லக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.
வாகனத்தைச் சாலையின் எப்பக்கமாக ஓட்ட வேண்டும்?

- A. வலப்பக்கம்
- B. நடுப்பகுதி
- C. இடப்பக்கம்
- D. இரு பக்கமும்

Correct answer: C. இடப்பக்கம்

இடப்பக்கமாகவே ஓட்ட வேண்டும் என்று பத்தி கூறுகிறது.

Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (விபத்தில்லா வாகனப் பயணம், p. 186 (PDF p. 196))

### Question 5

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை அறிந்து நடந்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். வாகனத்தை எப்போதும் சாலையின் இடப்பக்கமாகவே ஓட்ட வேண்டும். எதிரில் வரும் வாகனம் வலப்பக்கமாகச் செல்ல இடம் விட வேண்டும். சாலைகள் சந்திக்கும் இடத்திலும் மக்கள் கடக்கும் இடத்திலும் திருப்பத்திலும் வேகத்தைக் குறைக்க வேண்டும். தீயணைப்பு வண்டியும் அவசரச்சிகிச்சை ஊர்தியும் தடையின்றிச் செல்லக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.
வேகத்தைக் குறைக்க வேண்டிய இடமாகப் பத்தி கூறாதது எது?

- A. சாலைகள் சந்திக்கும் இடம்
- B. மக்கள் கடக்கும் இடம்
- C. திருப்பம்
- D. பாலம்

Correct answer: D. பாலம்

பாலத்தைப் பத்தி குறிப்பிடவில்லை; மற்ற மூன்றும் பத்தியில் உள்ளன.

Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (விபத்தில்லா வாகனப் பயணம், p. 186 (PDF p. 196))

### Question 6

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை அறிந்து நடந்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். வாகனத்தை எப்போதும் சாலையின் இடப்பக்கமாகவே ஓட்ட வேண்டும். எதிரில் வரும் வாகனம் வலப்பக்கமாகச் செல்ல இடம் விட வேண்டும். சாலைகள் சந்திக்கும் இடத்திலும் மக்கள் கடக்கும் இடத்திலும் திருப்பத்திலும் வேகத்தைக் குறைக்க வேண்டும். தீயணைப்பு வண்டியும் அவசரச்சிகிச்சை ஊர்தியும் தடையின்றிச் செல்லக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.
'வழிவிட வேண்டும்' என்பதன் பொருள் எது?

- A. விரைவாக முந்திச் செல்ல வேண்டும்
- B. மற்ற வாகனம் செல்ல இடம் தர வேண்டும்
- C. வாகனத்தை நிறுத்தாமல் ஓட்ட வேண்டும்
- D. வேறு சாலையில் செல்ல வேண்டும்

Correct answer: B. மற்ற வாகனம் செல்ல இடம் தர வேண்டும்

அவ்வூர்திகள் தடையின்றிச் செல்ல இடம் தருவதையே இத்தொடர் குறிக்கிறது.

Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (விபத்தில்லா வாகனப் பயணம், p. 186 (PDF p. 196))

### Question 7

கொடுக்கப்பட்ட பத்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
மலைச்சாலையில் பயணம் செய்யும்போது கூடுதல் கவனம் தேவை. மலையிலிருந்து இறங்கும் வாகனம், மேலே ஏறி வரும் வாகனம் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும். சாலைச்சந்திப்பில் நுழையும் வாகனம், அந்தச் சாலையில் முன்பே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் தர வேண்டும். தேவையான இடங்களில் கை சைகையையோ எச்சரிக்கை விளக்கையோ பயன்படுத்த வேண்டும்.
மலைச்சாலையில் முன்னுரிமை பெறும் வாகனம் எது?

- A. மலையிலிருந்து இறங்கும் வாகனம்
- B. மேலே ஏறி வரும் வாகனம்
- C. வேகமாகச் செல்லும் வாகனம்
- D. பெரிய வாகனம்

Correct answer: B. மேலே ஏறி வரும் வாகனம்

இறங்கும் வாகனம், ஏறி வரும் வாகனத்துக்கு முன்னுரிமை தர வேண்டும்.

Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (விபத்தில்லா வாகனப் பயணம், p. 186 (PDF p. 196))

### Question 8

தலைப்பிடலைப் பாரதியார் எவ்வாறு குறிப்பிட்டார்?

- A. மகுடமிடல்
- B. முடிசூட்டல்
- C. சொல்லாக்கம்
- D. கருத்துப்படம்

Correct answer: A. மகுடமிடல்

தலைப்பிடலை 'மகுடமிடல்' என்று பாரதியார் கூறினார்.

Source: பொதுத் தமிழ், மேல்நிலை முதலாம் ஆண்டு (General Tamil, Standard XI; Samacheer Kalvi) (இயல் 4 இதழாளர் பாரதி, p. 105 (PDF p. 117))

### Question 9

கீழே உள்ள செய்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
2025-26 வரவு-செலவுத் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கூடுதலாக ஓர் இலட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி அறிவிக்கப்பட்டது. பழுதடைந்த 25,000 வீடுகளை மறுகட்டுமானம் செய்ய ரூ.600 கோடி அறிவிக்கப்பட்டது.
புதிய வீடுகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகை எவ்வளவு?

- A. ரூ.600 கோடி
- B. ரூ.3,500 கோடி
- C. ரூ.25,000 கோடி
- D. ரூ.1,000 கோடி

Correct answer: B. ரூ.3,500 கோடி

புதிய வீடுகளுக்கு ரூ.3,500 கோடி என்று செய்தி கூறுகிறது.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (புதிய அறிவிப்புகள்: ஊரக வளர்ச்சி, p. 14 (PDF p. 14))

### Question 10

கீழே உள்ள செய்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
2025-26 ஆம் ஆண்டில் 1,125 மின் பேருந்துகளை அறிமுகப்படுத்த அரசு அறிவித்தது. மேலும் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி அறிவிக்கப்பட்டது.
எத்தனை டீசல் பேருந்துகள் மாற்றப்படும்?

- A. 1,125
- B. 70
- C. 700
- D. 1,825

Correct answer: C. 700

700 டீசல் பேருந்துகள் என்று செய்தி கூறுகிறது.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (புதிய அறிவிப்புகள்: பொதுப் போக்குவரத்து, p. 16 (PDF p. 16))

### Question 11

கீழே உள்ள செய்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
800 பெண்கள் பயனடையும் வகையில் 10 தோழி விடுதிகள் ரூ.77 கோடியில் அமைக்கப்படும் என்று 2025-26 வரவு-செலவுத் திட்டம் அறிவித்தது.
செய்தியைக் கொண்டு பொருத்துக.
(a) பயனடையும் பெண்கள் - 1. 10
(b) விடுதிகள் - 2. ரூ.77 கோடி
(c) தொகை - 3. 800

- A. (a) 1, (b) 3, (c) 2
- B. (a) 3, (b) 2, (c) 1
- C. (a) 3, (b) 1, (c) 2
- D. (a) 2, (b) 1, (c) 3

Correct answer: C. (a) 3, (b) 1, (c) 2

800 பெண்கள், 10 விடுதிகள், ரூ.77 கோடி.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (புதிய அறிவிப்புகள்: சமூகநீதி, p. 17 (PDF p. 17))

### Question 12

கீழே உள்ள செய்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
வெள்ளிமலையில் 1,100 மெகாவாட் திறனிலும் ஆழியாறில் 1,800 மெகாவாட் திறனிலும் நீரேற்றுப் புனல் மின் நிலையங்கள் ரூ.11,721 கோடியில் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆழியாறு மின் நிலையத்தின் திறன் எவ்வளவு?

- A. 1,100 மெகாவாட்
- B. 2,900 மெகாவாட்
- C. 11,721 மெகாவாட்
- D. 1,800 மெகாவாட்

Correct answer: D. 1,800 மெகாவாட்

ஆழியாறில் 1,800 மெகாவாட் என்று செய்தி கூறுகிறது.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (புதிய அறிவிப்புகள்: எரிசக்தி, p. 17 (PDF p. 17))

### Question 13

கீழே உள்ள செய்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
6 கடற்கரைகள் நீலக் கொடி சான்று பெற ரூ.24 கோடி செலவிடப்படும் என்று 2025-26 வரவு-செலவுத் திட்டம் அறிவித்தது.
எத்தனை கடற்கரைகளுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது?

- A. 24
- B. 6
- C. 4
- D. 30

Correct answer: B. 6

6 கடற்கரைகள் என்று செய்தி கூறுகிறது.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (புதிய அறிவிப்புகள்: சுற்றுச் சூழல், p. 17 (PDF p. 17))

### Question 14

கீழே உள்ள செய்தியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் ரூ.400 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது.
இச்செய்திக்குப் பொருத்தமான தலைப்பு எது?

- A. ஈரோட்டில் புதிய பாலம்
- B. ஐந்து மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாடு
- C. திருச்சியில் மட்டும் ரூ.400 கோடி
- D. மாநகராட்சித் தேர்தல் அறிவிப்பு

Correct answer: B. ஐந்து மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாடு

ஐந்து மாநகராட்சிகளின் நதிக்கரைப் பணிகளே செய்தியின் முழுப் பொருள்.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (புதிய அறிவிப்புகள்: நகர்ப்புர வளர்ச்சி, p. 14 (PDF p. 14))

### Question 15

கீழே உள்ள அரசு ஆவணப் பகுதியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026, 1.2.1 ஆய்வு: தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தத் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956, 27.12.1956 அன்று இயற்றப்பட்டது. 23.01.1957இல் இச்சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 345-இல் இச்சட்டம் இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது.
ஆவணப் பகுதியைக் கொண்டு பொருத்துக.
(a) இயற்றப்பட்ட நாள் - 1. 23.01.1957
(b) அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் - 2. 27.12.1956
(c) அரசமைப்புச் சட்டப் பிரிவு - 3. 345

- A. (a) 1, (b) 2, (c) 3
- B. (a) 2, (b) 1, (c) 3
- C. (a) 3, (b) 1, (c) 2
- D. (a) 2, (b) 3, (c) 1

Correct answer: B. (a) 2, (b) 1, (c) 3

27.12.1956 இயற்றப்பட்டது; 23.01.1957 வெளியிடப்பட்டது; பிரிவு 345.

Source: தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026 (Tamil Development Department, Policy Note 2025-26, Tamil) (1.2.1 ஆய்வு, p. 6 (PDF p. 13))

### Question 16

கீழே உள்ள அரசு ஆவணப் பகுதியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026, 1.5 கனவு இல்லம்: சாகித்திய அகாடமி, ஞானபீடம் போன்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய்ப் பிரிவு இல்லம், அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 1500 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும். ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் 22 விருதாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நான்காண்டுகளில் எத்தனை விருதாளர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது?

- A. 22
- B. 10
- C. 4
- D. 1500

Correct answer: A. 22

கடந்த நான்காண்டுகளில் 22 விருதாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஆவணம் கூறுகிறது.

Source: தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026 (Tamil Development Department, Policy Note 2025-26, Tamil) (1.5 கனவு இல்லம், p. 63 (PDF p. 70))

### Question 17

கீழே உள்ள அரசு ஆவணப் பகுதியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026, 1.5 கனவு இல்லம்: சாகித்திய அகாடமி, ஞானபீடம் போன்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய்ப் பிரிவு இல்லம், அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 1500 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும். ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் 22 விருதாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விரும்பும் மாவட்டத்தில் கட்டித்தரப்படும் வீட்டின் அளவு எவ்வளவு?

- A. 1000 சதுர அடி
- B. 1200 சதுர அடி
- C. 1500 சதுர அடி
- D. 2200 சதுர அடி

Correct answer: C. 1500 சதுர அடி

1500 சதுர அடியில் வீடு என்று ஆவணம் கூறுகிறது.

Source: தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026 (Tamil Development Department, Policy Note 2025-26, Tamil) (1.5 கனவு இல்லம், p. 62-63 (PDF p. 69-70))

### Question 18

கீழே உள்ள அரசு ஆவணப் பகுதியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026, 1.2.1 ஆய்வு: தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தத் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956, 27.12.1956 அன்று இயற்றப்பட்டது. 23.01.1957இல் இச்சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 345-இல் இச்சட்டம் இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது.
ஆவணம் குறிப்பிடும் அரசமைப்புச் சட்டப் பிரிவு எது?

- A. பிரிவு 343
- B. பிரிவு 351
- C. பிரிவு 1956
- D. பிரிவு 345

Correct answer: D. பிரிவு 345

பிரிவு 345 என்று ஆவணம் கூறுகிறது.

Source: தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026 (Tamil Development Department, Policy Note 2025-26, Tamil) (1.2.1 ஆய்வு, p. 6 (PDF p. 13))

### Question 19

கீழே உள்ள அரசு ஆவணப் பகுதியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026, சொற்களஞ்சியம்: வருவாய்ச் செலவினத்தைவிட வருவாய் வரவினம் மிகையாக இருந்தால் அது வருவாய் உபரி. வருவாய் வரவினத்தைவிட வருவாய்ச் செலவினம் மிகையாக இருந்தால் அது வருவாய்ப் பற்றாக்குறை.
கூற்று: வருவாய்ச் செலவினம் மிகையானால் அது வருவாய்ப் பற்றாக்குறை.
காரணம்: வருவாய் வரவினம் மிகையானால் அது வருவாய் உபரி.

- A. கூற்று – சரி; காரணம் – சரி
- B. கூற்று – சரி; காரணம் – தவறு
- C. கூற்று – தவறு; காரணம் – சரி
- D. கூற்று – தவறு; காரணம் – தவறு

Correct answer: A. கூற்று – சரி; காரணம் – சரி

இரண்டும் சொற்களஞ்சியத்தில் உள்ளன.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (சொற்களஞ்சியம், p. 28 (PDF p. 28))

### Question 20

கீழே உள்ள அரசு ஆவணப் பகுதியைப் படித்து, கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026, ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது: சொந்தவரி வருவாய் 45.6 சதவீதம்; பொதுக்கடன் 31.4; மத்திய வரிகளின் பங்கு 12.0; சொந்தவரி அல்லாத வருவாய் 5.9; உதவி மானியங்கள் 4.9; கடன்களின் வசூலும் மூலதன வரவும் 0.2.
ஒரு ரூபாயில் இரண்டாவது பெரிய பங்கு எது?

- A. சொந்தவரி வருவாய்
- B. பொதுக்கடன்
- C. மத்திய வரிகளின் பங்கு
- D. உதவி மானியங்கள்

Correct answer: B. பொதுக்கடன்

45.6 க்கு அடுத்து 31.4 என்பதே பெரியது; அது பொதுக்கடன்.

Source: வரவு – செலவுத் திட்டம் குறித்த குடிமக்களுக்கான கையேடு 2025-2026 (Citizens' Guide to the Budget 2025-26, Tamil) (ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது, p. 9 (PDF p. 9))

## Sources

- [Official syllabus page](https://www.tnpsc.gov.in/english/syllabus.html)
- [Notifications](https://www.tnpsc.gov.in/English/Notification.aspx)
