Previous-year papers
TNPSC Group 4 2025 question paper with answer key
2025 · G4
Questions 84 to 87 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 84
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
- A. ஆகாயகங்கை அருவி
- B. கேத்ரின் அருவி
- C. சுருளி அருவி
- D. குற்றால அருவி
Answer and explanation
Correct answer: D. குற்றால அருவி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 37, question 84; final answer key 17.11.2025, S.No. 84: D)
Question 85
தமிழ் வளர்ச்சித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 1.6 - கனவு இல்லம் : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. ‘கனவு இல்லத் திட்டத்தின்’ சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
- A. 9
- B. 17
- C. 8
- D. 10
Answer and explanation
Correct answer: D. 10
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 37, question 85; final answer key 17.11.2025, S.No. 85: D)
Question 86
“கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
- A. பெருமை
- B. கர்வம்
- C. குறைத்து மதிப்பிடாதே
- D. புகழ்
Answer and explanation
Correct answer: C. குறைத்து மதிப்பிடாதே
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 38, question 86; final answer key 17.11.2025, S.No. 86: C)
Question 87
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக : (a) கடன் கழித்தல் (b) கடை விரித்தல் (c) கட்சைக் கட்டுதல் (d) கக்கல் கரிசல் 1. கலங்கல் நீர் 2. முரண்படுதல் 3. தன் ஆற்றலைச் சொல்லுதல் 4. மனமின்றிச் செய்தல் (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 4 1 2 3
- C. 4 2 3 1
- D. 3 4 2 1
Answer and explanation
Correct answer: A. 4 3 2 1
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 38, question 87; final answer key 17.11.2025, S.No. 87: A)