முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 94 முதல் 101 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 94
நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘ஐவர்’ என்பதன் இலக்கணம் யாது?
- A. ஒன்றொழி பொதுச் சொல்
- B. இனங்குறித்தல்
- C. தொடர்மொழி
- D. பொதுமொழி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஒன்றொழி பொதுச் சொல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 25, question 94; final answer key 23.02.2021, S.No. 94: A)
கேள்வி எண் 95
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
- A. வேற்றுமையணி
- B. இல்பொருள் உவமையணி
- C. ஏகதேச உருவக அணி
- D. எடுத்துக்காட்டு உவமையணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. வேற்றுமையணி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 25, question 95; final answer key 23.02.2021, S.No. 95: A)
கேள்வி எண் 96
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்” இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
- A. நிலம் - வாழ்க்கை
- B. ஊன்றுகோல் - பெரியோர் சொல்
- C. ஊன்றுகோல் - நிலம்
- D. ஒழுக்கம் - வாய்ச்சொல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஊன்றுகோல் - பெரியோர் சொல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 25, question 96; final answer key 23.02.2021, S.No. 96: B)
கேள்வி எண் 97
“பட்டியுள் காளை படிபால் கரக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.
- A. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
- B. கொண்டு கூட்டுப் பொருள்கோள்
- C. மொழிமாற்றுப் பொருள்கோள்
- D. விற்பூட்டுப் பொருள்கோள்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 98
“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
- A. ரழ வரும்
- B. தந வரும்
- C. றன வரும்
- D. யத் தோன்றும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ரழ வரும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 26, question 98; final answer key 23.02.2021, S.No. 98: A)
கேள்வி எண் 99
னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
- A. னல முன் டணவும் ணள முன் றனவும்
- B. னல முன் றடவும் ணள முன் னணவும்
- C. னல முன் றனவும் ணளமுன் டணவும்
- D. னல முன் றணவும் ணளமுன் டனவும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. னல முன் றனவும் ணளமுன் டணவும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 26, question 99; final answer key 23.02.2021, S.No. 99: C)
கேள்வி எண் 100
“வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
- A. பனையோலைப் பெட்டி
- B. வயல்
- C. வட்ட வடிவு
- D. எல்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பனையோலைப் பெட்டி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 26, question 100; final answer key 23.02.2021, S.No. 100: A)
கேள்வி எண் 101
சரியான காரணங்களை தெரிவு செய்க : பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது. (1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும். (2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும். (3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
- A. (1), (2) மற்றும் (3)
- B. (1) மற்றும் (2) மட்டும்
- C. (2) மற்றும் (3) மட்டும்
- D. (1) மற்றும் (3) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (1) மற்றும் (2) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 27, question 101; final answer key 23.02.2021, S.No. 101: B)