உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2024

2024 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 58 முதல் 65 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 58

    பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

    1. A. கடல்
    2. B. ஆழி
    3. C. பரவை
    4. D. ஆறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஆறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 17, question 58; final answer key 09.01.2025, S.No. 58: D)

  2. கேள்வி எண் 59

    பிழை திருத்தம் செய்க.

    1. A. மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
    2. B. மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
    3. C. மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
    4. D. மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 17, question 59; final answer key 09.01.2025, S.No. 59: C)

  3. கேள்வி எண் 60

    பிழை திருத்தம் செய்க.

    1. A. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    2. B. வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
    3. C. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
    4. D. வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 17, question 60; final answer key 09.01.2025, S.No. 60: A)

  4. கேள்வி எண் 61

    பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

    1. A. நனைந்தான், படித்தான்
    2. B. திருத்தினான், நனைந்தான்
    3. C. வருவித்தான், திருத்தினான்
    4. D. படித்தான், வருவித்தான்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வருவித்தான், திருத்தினான்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 18, question 61; final answer key 09.01.2025, S.No. 61: C)

  5. கேள்வி எண் 62

    பின்வரும் தொடரைக் கண்டறிக. ‘பூங்குழலி யாழ் மீட்டினாள்’

    1. A. எதிர்மறைத் தொடர்
    2. B. செய்வினைத் தொடர்
    3. C. செயப்பாட்டு வினைத் தொடர்
    4. D. விழைவுத் தொடர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. செய்வினைத் தொடர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 18, question 62; final answer key 09.01.2025, S.No. 62: B)

  6. கேள்வி எண் 63

    விடைக்கேற்ற வினா அமைத்தல். வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.

    1. A. வணிக அறிவியல் என்றால் என்ன?
    2. B. எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?
    3. C. வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
    4. D. எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  7. கேள்வி எண் 64

    அகர வரிசைப்படுத்துக. கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்

    1. A. கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
    2. B. சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
    3. C. கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை
    4. D. கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 19, question 64; final answer key 09.01.2025, S.No. 64: C)

  8. கேள்வி எண் 65

    தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் ________

    1. A. தந்து
    2. B. தந்த
    3. C. தந்தது
    4. D. தந்தவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தந்தவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2024, question booklet CCSE4GT/2024, General Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) with General Studies, subject code 003, published with the tentative answer key (CCSE4GT/2024 page 19, question 65; final answer key 09.01.2025, S.No. 65: D)

ஆதாரங்கள்