உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 155 முதல் 158 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 155

    கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். கூற்று [A] : தமிழ்நாட்டின் 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது. காரணம் [R] : இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் போன்ற பிற வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது.

    1. A. [A] சரி [R] தவறு
    2. B. [A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
    3. C. [A] தவறு [R] சரி
    4. D. [A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. [A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 86, question 155; final answer key 17.11.2025, S.No. 155: B)

  2. கேள்வி எண் 156

    கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.

    1. A. [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
    2. B. [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
    3. C. [A] உண்மை ஆனால் [R] தவறானது
    4. D. [A] தவறானது ஆனால் [R] சரியானது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 87, question 156; final answer key 17.11.2025, S.No. 156: A)

  3. கேள்வி எண் 157

    பின்வருவனவற்றுள் மண்டல் கமிஷன் அறிக்கையோடு தொடர்புடைய சரியான கூற்று(க்கள்) எது/யாவை? (i) இந்த ஆணையமானது சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளது. (ii) சமூக குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் மற்றும் கல்வி குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப் பெற்றன. (iii) பொருளாதார குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 11 அளவுகோல்கள் மண்டல் கமிஷன் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    1. A. (i) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (i) மற்றும் (ii) மட்டும்
    4. D. (ii) மற்றும் (iii) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (i) மற்றும் (iii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 88, question 157; final answer key 17.11.2025, S.No. 157: B)

  4. கேள்வி எண் 158

    இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்

    1. A. அதிக தேவை
    2. B. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
    3. C. குறைவான உற்பத்தி
    4. D. குறைவான பண அளிப்பு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 89, question 158; final answer key 17.11.2025, S.No. 158: B)

ஆதாரங்கள்