உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 180 முதல் 184 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 180

    பின்வருவனவற்றுள் எவை சரியானவை? (1) மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். (2) மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார். (3) டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று. (4) டாக்டர். பி. வரதராசுலு “பிரபஞ்ச மித்திரன்” என்ற பத்திரிக்கையை நடத்தினார்.

    1. A. (1) மட்டும்
    2. B. (2) மட்டும்
    3. C. (1), (3) மற்றும் (4) மட்டும்
    4. D. (1), (2) மற்றும் (3) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (1), (3) மற்றும் (4) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 109, question 180; final answer key 17.11.2025, S.No. 180: C)

  2. கேள்வி எண் 181

    சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது : (i) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார். (ii) இந்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை “தைரிய நாள்” என்று அறிவித்துள்ளது. (iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.

    1. A. (iii) மட்டும்
    2. B. (i) மற்றும் (ii) மட்டும்
    3. C. (ii) மற்றும் (iii) மட்டும்
    4. D. (i) மற்றும் (iii) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (i) மற்றும் (iii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 110, question 181; final answer key 17.11.2025, S.No. 181: D)

  3. கேள்வி எண் 182

    குடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்தக் குடியரசுத் தலைவரையும் அவருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விருந்தினரையும் பொருத்திக் காட்டுக. குடியரசுத் தலைவர்கள் – சிறப்பு விருந்தினர்கள் (a) திரௌபதி முர்மு (b) ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (c) பிரணாப் முகர்ஜி (d) ராம் நாத் கோவிந்த் 1. சிரில் ராமபோசா 2. பிரபோவா சுபியாண்டோ 3. விளாடிமிர் புடின் 4. பராக் ஒபாமா (a) (b) (c) (d)

    1. A. 1 4 3 2
    2. B. 2 3 4 1
    3. C. 3 4 1 2
    4. D. 4 2 3 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 111, question 182; final answer key 17.11.2025, S.No. 182: B)

  4. கேள்வி எண் 183

    தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனரகத்தின் இலவச அழைப்பு எண் (1) 1062 மற்றும் 1963 (2) 1064 மற்றும் 1965 (3) 1066 மற்றும் 1967 (4) 1068 மற்றும் 1969

    1. A. (4)
    2. B. (2)
    3. C. (1)
    4. D. (3)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (2)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 112, question 183; final answer key 17.11.2025, S.No. 183: B)

  5. கேள்வி எண் 184

    தேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக. (i) 2003ல் எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. (ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம். (iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.

    1. A. (i) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (i) மற்றும் (ii) மட்டும்
    4. D. (ii) மற்றும் (iii) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (i) மற்றும் (ii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 113, question 184; final answer key 17.11.2025, S.No. 184: C)

ஆதாரங்கள்