முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 1 முதல் 8 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 1
பிழையான தொடரைக் கண்டறிக.
- A. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
- B. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
- C. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
- D. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 3, question 1; final answer key 17.11.2025, S.No. 1: C)
கேள்வி எண் 2
வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக : (a) அழிந்தது தீமை (b) அற்றது பிறப்பு (c) நல்லது கை (d) குளிர்ந்தது நிலம் 1. சினைப்பெயர் கொண்டது 2. இடப்பெயர் கொண்டது 3. குணப்பெயர் கொண்டது 4. தொழிற்பெயர் கொண்டது (a) (b) (c) (d)
- A. 3 1 4 2
- B. 3 4 1 2
- C. 4 3 2 1
- D. 4 1 2 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 4 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 3, question 2; final answer key 17.11.2025, S.No. 2: B)
கேள்வி எண் 3
‘செற்றம்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
- A. பகை
- B. வண்மை
- C. வன்மை
- D. கேண்மை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கேண்மை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 3, question 3; final answer key 17.11.2025, S.No. 3: D)
கேள்வி எண் 4
‘பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
- A. நிகழ்காலப் பெயரெச்சம்
- B. இறந்தகாலப் பெயரெச்சம்
- C. எதிர்காலப் பெயரெச்சம்
- D. குறிப்புப் பெயரெச்சம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. எதிர்காலப் பெயரெச்சம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 4, question 4; final answer key 17.11.2025, S.No. 4: C)
கேள்வி எண் 5
‘நட’ என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- A. நடந்தது
- B. நடப்பது
- C. நடப்பவை
- D. நடந்தவன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நடந்தவன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 4, question 5; final answer key 17.11.2025, S.No. 5: D)
கேள்வி எண் 6
“வை” என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
- A. வைத்த
- B. வைத்து
- C. வைத்தது
- D. வைத்தாள்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 7
கூற்று : ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
- A. கூற்று – சரி; காரணம் – தவறு
- B. கூற்று – தவறு; காரணம் – சரி
- C. கூற்று – சரி; காரணம் – சரி
- D. கூற்று – தவறு; காரணம் – தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கூற்று – சரி; காரணம் – தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 5, question 7; final answer key 17.11.2025, S.No. 7: A)
கேள்வி எண் 8
கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும். காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
- A. கூற்று – சரி; காரணம் – தவறு
- B. கூற்று – தவறு; காரணம் – சரி
- C. கூற்று – சரி; காரணம் – சரி
- D. கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. கூற்று – சரி; காரணம் – சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 5, question 8; final answer key 17.11.2025, S.No. 8: C)