முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2025
2025 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 97 முதல் 101 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 97
கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார். காரணம் [R] : அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
- A. [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
- C. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- D. [A] தவறு ஆனால் [R] சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 43, question 97; final answer key 17.11.2025, S.No. 97: B)
கேள்வி எண் 98
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும். (1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. (2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது. (3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார். (4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- A. (1) மட்டும்
- B. (2) மட்டும்
- C. (3) மட்டும்
- D. (4) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (3) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 43, question 98; final answer key 17.11.2025, S.No. 98: C)
கேள்வி எண் 99
‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
- A. நாயனார்
- B. நல்லந்துவனார்
- C. நாகனார்
- D. சேந்தனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நாகனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 44, question 99; final answer key 17.11.2025, S.No. 99: C)
கேள்வி எண் 100
‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
- A. மனமார விருந்தினரை உபசரியாதவர்
- B. பண்புடன் பழகாதவர்
- C. இரக்கம் இல்லாதவர்
- D. மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இரக்கம் இல்லாதவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 44, question 100; final answer key 17.11.2025, S.No. 100: C)
கேள்வி எண் 101
கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக. (a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி (b) ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல் (c) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம் (d) சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் 1. 18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2. ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல் 3. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 4. 6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் (a) (b) (c) (d)
- A. 2 3 1 4
- B. 4 2 3 1
- C. 3 4 2 1
- D. 2 4 1 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 3 4 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 45, question 101; final answer key 17.11.2025, S.No. 101: C)