உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2025

2025 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 68 முதல் 75 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 68

    குதிர்தல் – இணையான வேறு சொல்லறிக.

    1. A. படிதல்
    2. B. குடியமர்தல்
    3. C. ஒழுங்காதல்
    4. D. சீராதல்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  2. கேள்வி எண் 69

    எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.

    1. A. எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
    2. B. எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
    3. C. எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
    4. D. இவை எதுவும் இல்லை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 29, question 69; final answer key 17.11.2025, S.No. 69: A)

  3. கேள்வி எண் 70

    பொருத்தமானதைத் தேர்வு செய்க : மலை

    1. A. வெற்பு, சிலம்பு, பொருப்பு
    2. B. பொழிவு, எழில், வனப்பு
    3. C. அருள், பரிவு, கருணை
    4. D. ஆதவன், பகலவன், ஞாயிறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வெற்பு, சிலம்பு, பொருப்பு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 30, question 70; final answer key 17.11.2025, S.No. 70: A)

  4. கேள்வி எண் 71

    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : கலி, கழி

    1. A. போர், மிகுதி
    2. B. கலித்தல், கழித்தல்
    3. C. மகிழ்ச்சி, களித்தல்
    4. D. கலித்தொகை, மாவு களி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. போர், மிகுதி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 30, question 71; final answer key 17.11.2025, S.No. 71: A)

  5. கேள்வி எண் 72

    அரைப்புள்ளி அமையும் இடங்கள் : கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார். காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.

    1. A. கூற்று சரி; காரணம் சரியன்று
    2. B. கூற்று சரியன்று; காரணம் சரி
    3. C. கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
    4. D. கூற்று, காரணம் இரண்டும் சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கூற்று, காரணம் இரண்டும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 31, question 72; final answer key 17.11.2025, S.No. 72: D)

  6. கேள்வி எண் 73

    ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் – இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.

    1. A. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
    2. B. ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
    3. C. ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
    4. D. ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 31, question 73; final answer key 17.11.2025, S.No. 73: A)

  7. கேள்வி எண் 74

    பொருத்துக : விலங்குகள் (a) நவ்வி (b) முதலை (c) உடும்பு (d) மீன், கெண்டை இளமைப்பெயர் 1. சினை 2. ஓந்தி 3. பார்ப்பு 4. மறி (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 4 1 2 3
    3. C. 4 2 1 3
    4. D. 1 4 3 2

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  8. கேள்வி எண் 75

    புல்லின் உறுப்பைக் கண்டறிக.

    1. A. தளிர்
    2. B. முறி
    3. C. குழை
    4. D. ஓலை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஓலை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2025, question booklet CCSEIVGT/2025, Part A Tamil Eligibility-cum-Scoring Test, Part B General Studies and Part C Aptitude and Mental Ability, subject code 496, published with the tentative answer key (CCSEIVGT/2025 page 32, question 75; final answer key 17.11.2025, S.No. 75: D)

ஆதாரங்கள்