உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2012

2012 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 41 முதல் 48 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 41

    மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?

    1. A. பிட்யூட்டரி சுரப்பி
    2. B. தைராய்டு சுரப்பி
    3. C. கணைய சுரப்பி
    4. D. அட்ரீனல் சுரப்பி.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. அட்ரீனல் சுரப்பி.

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 25, question 41; tentative key (booklet tick, no final key published), S.No. 41: D)

  2. கேள்வி எண் 42

    கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை ________ என்று அழைக்கப்படுகிறது.

    1. A. ரெடினோபதி
    2. B. கண்புரை
    3. C. அஸ்டிக் மாட்டிசம்
    4. D. பிரஸ்பியோபியா.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கண்புரை

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 26, question 42; tentative key (booklet tick, no final key published), S.No. 42: B)

  3. கேள்வி எண் 43

    தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?

    1. A. சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்ததூள், வைட்டமின்
    2. B. சர்க்கரை, புரதம், மகரந்ததூள், வைட்டமின்
    3. C. சர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
    4. D. சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்ததூள், வைட்டமின்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 26, question 43; tentative key (booklet tick, no final key published), S.No. 43: A)

  4. கேள்வி எண் 44

    மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை

    1. A. உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
    2. B. கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
    3. C. குளோனிங் முறை
    4. D. கேரியோடைப்பிங் முறை.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கருச்செல் ஜீன் சிகிச்சை முறை

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 26, question 44; tentative key (booklet tick, no final key published), S.No. 44: B)

  5. கேள்வி எண் 45

    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட ) பாதிக்கப்படுகிறது. II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும். இவற்றுள் :

    1. A. I சரி ஆனால் II தவறு
    2. B. I தவறு ஆனால் II சரி
    3. C. இரண்டுமே சரி
    4. D. இரண்டுமே தவறு.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. I சரி ஆனால் II தவறு

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 26, question 45; tentative key (booklet tick, no final key published), S.No. 45: A)

  6. கேள்வி எண் 46

    கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்

    1. A. கிரிகர் மெண்டல்
    2. B. சார்லஸ் டார்வின்
    3. C. இராபர்ட் ஹூக்
    4. D. இராபர்ட் பிரவுன்.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இராபர்ட் ஹூக்

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 27, question 46; tentative key (booklet tick, no final key published), S.No. 46: C)

  7. கேள்வி எண் 47

    ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள் I. சூரிய ஒளி, பசுங்கணிகம் II. CO₂, H₂O III. சூரிய ஒளி, பைலி புரதம் IV. H₂O, வைட்டமின்கள். இவற்றுள் :

    1. A. I & IV
    2. B. II & IV
    3. C. I & II
    4. D. III & IV.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. I & II

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 27, question 47; tentative key (booklet tick, no final key published), S.No. 47: C)

  8. கேள்வி எண் 48

    பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் I – பட்டியல் II a) கத்தரி b) ஆப்பிள் c) பட்டாணி d) வெண்டை 1. லெக்யூம் 2. பெர்ரி 3. அறை வெடிகனி 4. போம். குறியீடுகள் : a b c d

    1. A. 2 4 1 3
    2. B. 4 1 3 2
    3. C. 3 1 2 4
    4. D. 1 2 3 4.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2 4 1 3

    தற்காலிக விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services examination 2012 (07.07.2012), question booklet series SGSY, General Knowledge with General Tamil, General Knowledge file (questions 1-100), published with the tentative answer key (SGSY page 28, question 48; tentative key (booklet tick, no final key published), S.No. 48: A)

ஆதாரங்கள்