உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 151 முதல் 157 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 151

    ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?

    1. A. ஊருணி
    2. B. கடல்
    3. C. ஆறு
    4. D. ஏரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஊருணி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 58, question 151; final answer key 10.10.2023, S.No. 151: A)

  2. கேள்வி எண் 152

    தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ________ அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.

    1. A. சென்னைத் துறைமுகக் கழகம்
    2. B. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
    3. C. நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
    4. D. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 59, question 152; final answer key 10.10.2023, S.No. 152: D)

  3. கேள்வி எண் 153

    2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்?

    1. A. தாமோதர் மௌசோ
    2. B. கிருஷ்ணா சோப்தி
    3. C. அமிதவ் கோஷ்
    4. D. நில்மனி பூக்கன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. நில்மனி பூக்கன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 59, question 153; final answer key 10.10.2023, S.No. 153: D)

  4. கேள்வி எண் 154

    இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.

    1. A. 334, 342A மற்றும் 366
    2. B. 338B, 341 மற்றும் 363
    3. C. 338B, 342A மற்றும் 366
    4. D. 333, 341A மற்றும் 362
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 338B, 342A மற்றும் 366

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 60, question 154; final answer key 10.10.2023, S.No. 154: C)

  5. கேள்வி எண் 155

    கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி? (i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே “Om” எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது. (ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி “Om” (iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி “Om”

    1. A. (i) மற்றும் (ii) மட்டும்
    2. B. (ii) மற்றும் (iii) மட்டும்
    3. C. (i) மற்றும் (iii) மட்டும்
    4. D. (i), (ii) மற்றும் (iii) அனைத்தும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (i), (ii) மற்றும் (iii) அனைத்தும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 61, question 155; final answer key 10.10.2023, S.No. 155: D)

  6. கேள்வி எண் 156

    தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்

    1. A. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
    2. B. கிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி
    3. C. நர்மதை, தபதி மற்றும் மாஹி
    4. D. மாஹி, மகாநதி மற்றும் கோதாவரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நர்மதை, தபதி மற்றும் மாஹி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 62, question 156; final answer key 10.10.2023, S.No. 156: C)

  7. கேள்வி எண் 157

    சரியான இணையைக் கண்டுபிடி.

    1. A. நியூக்ளியோசைடு – நைட்ரஜன் காரம் + பாஸ்பேட்
    2. B. பிரிமிடின்கள் – சைட்டோசின் மற்றும் சர்க்கரை
    3. C. பியூரின்கள் – அடினைன் மற்றும் குவானைன்
    4. D. நியூக்ளியோடைடு – நியூக்ளியோசைடு + சர்க்கரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பியூரின்கள் – அடினைன் மற்றும் குவானைன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 62, question 157; final answer key 10.10.2023, S.No. 157: C)

ஆதாரங்கள்