முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 165 முதல் 167 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 165
சரியான கூற்றுக்களைக் கண்டறிக. 1. பாரதியின் ‘இந்தியா’ வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது. 2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார். 3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார். 4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
- A. 1 மற்றும் 2 மட்டும் சரி
- B. 1, 2 மற்றும் 3 மட்டும் சரி
- C. 2 மற்றும் 3 மட்டும் சரி
- D. 2, 3 மற்றும் 4 மட்டும் சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 2, 3 மற்றும் 4 மட்டும் சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 67, question 165; final answer key 10.10.2023, S.No. 165: D)
கேள்வி எண் 166
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். (i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது. (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார். (iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார். (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
- A. (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
- B. (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
- C. (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
- D. (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 68, question 166; final answer key 10.10.2023, S.No. 166: B)
கேள்வி எண் 167
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். பத்தி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார். பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
- A. ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
- B. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
- C. வ,உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
- D. கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 69, question 167; final answer key 10.10.2023, S.No. 167: D)